அதிகாலை 3.30 மணி! ஒருவர் பின் ஒருவன்! கற்பழித்தவர்களை அடுத்தடுத்து போட்டுத் தள்ளிய போலீஸ்! அங்கு நடந்தது என்ன?

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை கற்பழித்து கொலை செய்த 4 பேரையும் போலீசார் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் என்கவுண்டரில் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை கற்பழித்து கொலை செய்த 4 பேரை போலீசார் என்கவுண்டரில் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த 27 ஆம் தேதி புதன்கிழமை மாலை கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான முறையில் 4 கொடூரர்கள் மூலம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஹைதராபாத் சந்தனபள்ளி டோல்கேட் அருகே நடைபெற்றது.

கொலை செய்த பின்பு அந்த பெண்ணை அந்த பாலத்தின் கீழே வைத்து அந்த அரக்கர்கள் தீயிட்டு கொளுத்தி விட்டனர். போலீசார் இந்த சம்பவம் நடந்து 24 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்தனர்.

முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரையும் போலீசார் கைது செய்து பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் போலீசார் அந்த நான்கு பேரையும் குற்றம் எவ்வாறு நடந்தது என்பதை விசாரிப்பதற்காக சம்பவம் நடந்த அந்த சந்தனபள்ளி டோல்கேட் அருகே அழைத்துச் செல்ல நேற்றைய தினம் முடிவு செய்துள்ளனர். ஆகையால் நேற்று இரவு முழுவதும் அந்த நான்கு பேரையும் உறங்கவிடாமல் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் போலீஸ் கமிஷனரின் உத்தரவு பெயரில் அமைக்கப்பட்ட தனிப்படை மூலம் இவர்கள் நான்கு பேரையும் 6 பேர் கொண்ட போலீசார் குழு சம்பவம் நடந்த சந்தனபள்ளி டோல்கேட் அருகே விசாரணைக்காக இன்று காலை 3.30 மணி அளவில் அழைத்து சென்றுள்ளனர்.

விசாரணை மேற்கொண்டு இருந்த பொழுது அந்த நான்கு பேரும் போலீசாரிடம் இருந்து அருகில் இருந்த புதரில் புகுந்து தப்பிக்க முயன்று உள்ளனர்.

ஆகையால் போலீசார் அவர்கள் 4 பேரையும் சரமாரியாக துப்பாக்கி மூலம் குற்றவாளிகளின் நெற்றிப் பொட்டிலும் வயிற்றுப் பகுதிகளிலும் சுட்டு வீழ்த்தியுள்ளனர். அப்படியாக சுடும் பொழுது முகமது ஆரிப் போலீசாரால் கடைசியாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் பாதுகாப்பு கருதி தான் 4 பேரையும் என்கவுண்டரில் கொலை செய்ததாக போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரும் படுகாயமடைந்துள்ளார் . ஆனால் அவருக்கு கைகளில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.