பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட அதே இடத்தில் தரமான சம்பவம்! என்கவுண்டர் செய்து கெத்து காட்டிய ஐதராபாத் போலீஸ்!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை கற்பழித்து கொலை செய்த 4 பேரை போலீசார் என்கவுண்டரில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத்தில் கடந்த புதன்கிழமை மாலை கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான முறையில் 4 கொடூரர்கள் மூலம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஹைதராபாத் சந்தனபள்ளி டோல்கேட் அருகே நடைபெற்றது.

கொலை செய்த பின்பு அந்த பெண்ணை அந்த பாலத்தின் கீழே வைத்து அந்த அரக்கர்கள் தீயிட்டு கொளுத்தி விட்டனர். போலீசார் இந்த சம்பவம் நடந்து 24 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்தனர்.

முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரையும் போலீசார் கைது செய்து பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் 4 பேரை தூக்கிலிட வேண்டும் என்றும் ஓடவிட்டு சுட வேண்டும் என்றும் கூறி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் அந்த நான்கு பேரையும் குற்றம் எவ்வாறு நடந்தது என்றே விசாரிப்பதற்காக சம்பவம் நடந்த அந்த சந்தனபள்ளி டோல்கேட் அருகே அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணை மேற்கொண்டு இருந்த பொழுது அந்த நான்கு பேரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று உள்ளனர்.

ஆகையால் போலீசார் அவர்கள் 4 பேரையும் சரமாரியாக துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி தான் 4 பேரையும் என்கவுண்டரில் கொலை செய்ததாக போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.