ஆப்ரேசன் செய்த டாக்டர்களின் மிருகத்தனம்! பெண்ணின் வயிற்றில் வைக்கப்பட்ட விபரீத பொருள்!

அறுவை சிகிச்சை முடிந்து 3 மாதங்கள் ஆன நிலையில், பெண் ஒருவருக்கு வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.


ஐதராபாத்தில்தான் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகேஷ்வரி சவுத்தரி (33) என்ற பெண், வயிற்று வலி காரணமாக, கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதியன்று ஐதராபாத்தில் உள்ள நிஸாம் மருத்துவ அறிவியல் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்க நோய் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, நவம்பர் 2ம் தேதியன்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதன்பின், நவம்பர் 12ம் தேதியன்று அவர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்

 

அறுவை சிகிச்சை நடந்து, 3 மாதங்கள் கடந்த நிலையில், மீண்டும் மகேஷ்வரிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதே மருத்துவமனைக்கு, சென்ற வெள்ளியன்று சென்றுள்ளார்

 

அங்கு அவருக்கு, எக்ஸ்-ரே பரிசோதனை செய்து பார்த்தபோது, வயிறுக்குள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஃபோர்செப்ஸ் (இடுக்கி போன்ற கத்தரிக்கோல்) இருப்பது தெரியவந்தது.

 

இந்த இடுக்கி அறுவை சிகிச்சையின்போது, டாக்டர்கள் உடலின் உள்ளுறுப்புகளை பிடித்துக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்படுவதாகும்இந்த தகவல் தெரிந்ததும், மகேஷ்வரியின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அலட்சியமாகச் செயல்பட்ட டாக்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய டாக்டர்கள், மருத்துவமனை செலவிலேயே, மீண்டும் மகேஷ்வரிக்கு அறுவை சிகிச்சை நடத்தி, வயிற்றில் உள்ள இடுக்கியை வெளியில் எடுக்கப் போவதாக உறுதி அளித்தனர்

 

அதேசமயம், இந்த தவறு எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி விசாரிக்க, 3 பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை, நிஸாம் மருத்துவ அறிவியல் இன்ஸ்டிடியூட் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில வாரங்களில், இந்த விசாரணை முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது

 

டாக்டர்களின் அலட்சியம் காரணமாக, பெண் ஒருவர் பாதிக்கப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.