எரிஞ்சி சாம்பலான குடிசை..! ஊரடங்கு நேரத்திலும் புதிய வீடு கட்டி கொடுத்த அரசு டாக்டர்! நெகிழ்ந்த ஏழைக் குடும்பம்..!

கூலி தொழிலாளி ஒரு குடிசை வீடு எரிந்தபோன நிலையில், மருத்துவர் ஒருவர் அவருக்கு உதவிய சம்பவமானது பேராவூரணியில் வைரலாகி வருகிறது.


பேராவூரணிக்கு அருகிலுள்ள செங்கமலம் கிராமத்தை சேர்ந்த சத்யா என்பவர் விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் குடிசையில் வாழ்ந்து வந்தனர். 

5 நாட்களுக்கு முன்னர் பெற்றோர் விவசாய வேலைக்கு சென்ற போது, 10 வயது மகள் சமைத்து கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக குடிசை திடீரென்று தீப்பிடித்து எரிந்து போனது. அந்த இளம்பெண் கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வீட்டில் இருந்த அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றினர். ஆனால் துரதிருஷ்டவசமாக வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் அந்த தீ விபத்தில் எரிந்து போயின. 

இதனை அந்த ஊருக்கு அருகே அமைந்துள்ள மருத்துவரான சௌந்தர்ராஜன் என்பவர் கேள்விப்பட்டுள்ளார். உடனடியாக நேரில் சென்று சத்யா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். நிச்சயமாக குடிசையாக இருக்கும் வீட்டை கூரை வீட்டை மாற்ற உதவுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஊரடங்கு காலத்திலும் டாக்டர் சௌந்தர்ராஜன் தன்னுடைய நண்பர்களின் மூலம் பொருட்களை வரவழைத்தார். மேலும் உடனடியாக குடிசை வீட்டை அவர் கூரை வீடாக மாற்றி அமைக்க பண உதவி செய்தார். அதுமட்டுமின்றி அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் உடைகள், சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்கள் முதலியவற்றையும் ஏற்பாடு செய்தார்.

இறுதியாக வீடு முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு பால் காய்ச்சுவதற்கு சத்யா குடும்பத்தினர் டாக்டர் சௌந்தரராஜன் நேரில் சென்று அழைத்தனர். சௌந்தர்ராஜனிடம் சத்யா குடும்பத்தினர் அனைவரும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவர் சௌந்தர்ராஜன் கூறுகையில், "ஊரடங்கு நேரத்தில் பொருட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. என்னுடைய வணிக நண்பரான ஜகுபர் அலி என்பவர் மூலம் பொருட்களை ஏற்பாடு செய்தேன். அவர்களுக்கு பொருட்களை அளித்த போது, அவர்களின் மனமகிழ்ச்சி என்னை பெரிதளவில் மணமகள் செய்தது" என்று கூறினார்.

மருத்துவர் செய்த இந்த உதவியை அந்த கிராமத்து மக்கள் பெரிதளவில் போற்றி புகழ்ந்து வருகின்றனர்.