கணவன் வெளிநாட்டில்! கணவன் கட்டிக் கொடுத்த வீட்டில் தகாத உறவு! மனைவியை கள்ளக் காதலனுடன் வைத்து பூட்டிய மாமனார்!

மருமகளின் கள்ளக்காதலை மாமனார் அம்பலப்படுத்திய சம்பவமானது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டையில் சுலோச்சனா என்ற பெண் வசித்து வந்தார். இவருடைய வயது 32. இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. சுலோச்சனாவின் கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். 

தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக மனைவியின் பெயரில் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைப்பார். மேலும் 3 மாதங்களுக்கு முன்னர் விடுமுறைக்கு வந்த போது, மனைவியின் ஆசைப்படி அவருக்கு ஒரு தனி குடியிருப்பு பரிசளித்துள்ளார்.

இந்நிலையில் சுலோச்சனாவுக்கு புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். அவ்வப்போது உடலுறவிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவமானது லேசாக சுலோச்சனாவின் மாமனாருக்கு தெரியவந்தது.

உறுதி செய்துகொள்வதற்காக சுலோச்சனாவின் வீட்டிற்கு அவருடைய மாமனார் சென்றுள்ளார். அப்போது இருவரும் வீட்டில் கொஞ்சி குலாவுவதை கண்ட சுலோச்சனாவின் மாமனார் கையும் களவுமாக பிடிக்க நினைத்தார். வீட்டின் முன் பக்கத்தை அவர் பூட்டி மருமகளின் நடத்தையை அம்பலப்படுத்த முடிவெடுத்தார்.

ஆனால் யாரோ வீட்டை பூட்டுவதை உணர்ந்த சுலோச்சனா, தன் கள்ளக்காதலனுடன் பின்வாசல் வழியாக தப்பியோடிவிட்டார். ஏமாற்றமடைந்த மாமனார் தன் மருமகள் மீது புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த சம்பவமானது புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.