கணவன் மீது 40 திருட்டு வழக்குகள்! திருமணத்திற்கு பிறகே தெரிந்து கொண்ட மனைவி! ஆனால் அவர் செய்த நெகிழ்ச்சி செயல்!

கணவர் திருடர் என்று தெரிந்துகொண்ட மனைவி அவரை விட்டுப்பிரியாமல், அவரை திருத்தி காட்டிய சம்பவமானது சென்னையில் அரங்கேறியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் பூர்வீகமாக கொண்டவர் கமலக்கண்ணன். இவர் சென்னையிலுள்ள பட்டினப்பாக்கம், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர் மீது 40 கொள்ளை வழக்குகளும், 5 குண்டர் சட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

6 மாதங்களுக்கு முன்னால் இவருக்கு கலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அடிக்கடி கமலக்கண்ணன் நீதிமன்றத்திற்கு சென்று வருவதை கண்காணித்த கலா, அதுபற்றி அவரிடம் வினவியுள்ளார்.

உண்மையை மறைக்காமல் கமலக்கண்ணன் தான் ஒரு திருடன் என்று ஒப்பு கொண்டுள்ளார். பிற பெண்களை போன்று திருடனை திருமணம் செய்து கொண்டோம் என்று மனம் வருத்தப்படாத கலா, தன் கணவனை திருந்தி வாழ வைக்க முயற்சித்தார்.

அந்த முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றார். தற்போது எங்கெல்லாம் கணவர் மீது வழக்குள்ளதோ, அங்கெல்லாம் இருவரும் ஜோடியாக சென்று இனி எந்த குற்ற சம்பவங்களிலும் ஈடுபட மாட்டேன் என்று உறுதி அளித்து வருகிறார்.

அதன்படி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று தன்மீது மீதமுள்ள வழக்குகளை விரைந்து முடித்து வைத்தால், தண்டனையை அனுபவித்துவிட்டு நிம்மதியாக ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிய திட்டமிட்டு இருப்பதாக மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்த சம்பவமானது கேட்போரை நெகிழ வைக்கும் வண்ணமுள்ளது.