என் மீதே ஒன் பாத்ரூம் போகிறார்! தடுத்தால் மிரட்டுகிறார்! அரசு உயர் அதிகாரி மீது மனைவி பகீர் புகார்!

உயர் பொறுப்பிலிருக்கும் அரசாங்க அதிகாரி ஒருவர் மனைவியை கொடுமைப்படுத்தியதாக  வெளியான வீடியோ வைரலாகி வருகிறது.


உத்திரபிரதேச மாநிலத்தில் பாபுராம் நிஷாத் என்பவர் வசித்துவருகிறார். அம்மாநிலத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வர்க நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்த பதவியானது அமைச்சருக்கு நிகரானது ஆகும். இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் நீத்து  என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

சமீபத்தில் நீத்து அழுது கொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருடைய கணவர் அவரை மிகவும் கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார். மேலும் அவர் மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அதன் பின்னர் துப்பாக்கியை காட்டி நீத்து மற்றும் அவருடைய குடும்பத்தினரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

சமீபத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக நீத்து பலமுறை காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் பாபுராமின் செல்வாக்கினால் உள்ளூர் காவல்துறையினர் புகாரை எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்த நீத்து உத்திர பிரதேச முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்திடமும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனக்கு நேர்ந்த இன்னல்களை விவரித்து கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய மனைவி தன்னை மிரட்டி பணம் பறிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார் என்று பாபுராம் நீத்து மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.