ஒரே ஒரு டிவி..! ஒரு பிரிட்ஜ்க்காக! திருமணமான 10 மாதத்தில் 21 வயது இளம் பெண் எடுத்த விபரீத முடிவு! கதறும் பெற்றோர்!

வரதட்சணை கொடுமையை தாங்க இயலாது பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் முதுநகர் என்னும் பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகளின் பெயர் சபினா. சபினாவின் வயது 21. இவர் ஒரு என்ஜினீயரிங் பட்டதாரியாவார். 

சிதம்பரம் மாவட்டத்திலுள்ள பெரியகுப்பம் என்னும் கிராமத்தில் பாவாடைசாமி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகனின் பெயர் பாவேந்தன். 10 மாதங்களுக்கு முன்னர் பாவேந்தனுக்கும், சபினாவுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

வரதட்சணையாக நகை மற்றும் பல சீர்வரிசை பொருட்களை சரவணன் பாவேந்தனுக்கு கொடுத்தார். டிவி மற்றும் குளிர்சாதன பெட்டியை சில மாதங்கள் கழித்து தருவதாக கூறியுள்ளார். குடும்ப வறுமை காரணமாக கூறியவாறு சரவணனால் மீதமுள்ள சீர்வரிசை பொருட்களை தர இயலவில்லை.

இதனால் பாவேந்தன் மற்றும் அவருடைய பெற்றோர் சபினாவை கொடுமைப்படுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் புகுந்த வீட்டில் கொடுமையை தாங்க இயலாத சபினா, தன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அப்போது பாவேந்தன் சபினாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சபினா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சபினா உயிரிழந்தார்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் சரவணன் வரதட்சனை கொடுமை தாங்காமல் தன்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பாவேந்தன் மற்றும் அவரது பெற்றோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.