என் மகளை அவன் அடித்தே கொன்று விட்டான்..! மருமகன் மீது பாய்ந்த மாமியார்! அரியலூர் திகுதிகு!

23 வயது மனைவியை கணவரின் குடும்பத்தினர் அடித்துக்கொலை செய்திருக்கும் சம்பவமானது அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செந்துறை அருகே மருவத்தூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய வயது 27. இவர் அதே பகுதியில் உள்ள ஈ.பி. ஆபிசில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் செந்துறையில் சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு இருவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதன்பின்னர் அவர்களுடைய வாழ்க்கையில் தகராறுகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்த வண்ணம் உள்ளன. சம்பவத்தன்று பொன்பரப்பியில் உள்ள உறவினரின் திருமணத்திற்காக சென்று வீட்டிற்கு திரும்பினார். அப்போது இருவருக்குள்ளும் கடுமையான தகராறுகள் ஏற்பட்டுள்ளது. இருவரும் பயங்கரமாக சண்டை போட்டு கொண்டுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக யாரும் எதிர்பாராத வகையில் மறுநாளில் கார்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தியை பிரபாகரன் உடனடியாக கார்த்திகாவின் பெற்றோரிடம் தெரிவித்தார்.

அலறி அடித்துக்கொண்டு கார்த்திகாவின் பெற்றோர் பிரபாகரனின் வீட்டிற்கு வந்தனர். ஏற்கனவே அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆத்திரமடைந்த கார்த்திகாவின் பெற்றோர் பிரபாகரனின் வீட்டை அடித்து உதைத்தனர். காவல்துறையினர் சிறு போராட்டத்திற்கு பிறகு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆவேசத்தில் இருந்த கார்த்திகாவின் பெற்றோர் சடலத்தை அவரை பொன்பரப்பிக்கு அழைத்து செல்வதாக முறையிட்டனர். 

ஆனால் காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்திவிட்டனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார்த்திகாவின் உடலை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது செந்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.