என்னை சாகவிடுங்க! ஹைகோர்ட்டில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்! பதற வைக்கும் காரணம்!

கணவரிடம் இருந்து குழந்தையை மீட்டுத்தருமாறு பெண் ஒருவர் நீதிமன்றத்தின் வாயிலில் தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னையில் அமைந்தகரை எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு துர்கா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த தமிழரசு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதனிடையே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 6 வருடங்களுக்குப் முன்னர் இருவரும் பிரிந்தனர். குழந்தை தன் தாயான துர்காதேவியிடம் வளர்ந்து வந்தது.

சில மாதங்களுக்கு முன்னர் கணவர் தமிழரசு குழந்தையை எடுத்து சென்றுள்ளார். இதனால் துர்காதேவி கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளானார். காவல் நிலையத்தில் பலமுறை குழந்தையை மீட்டுத்தருமாறு புகாரளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வந்துள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த துர்காதேவி நேற்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். உயர்நீதிமன்றத்தின் வாயிலில்  மண்ணெண்ணெய் தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். தக்க சமயத்தில் அவரைக் கண்ட காவல்துறையினர், தீக்குளிக்கும் முயற்சியை தடுத்தனர்.

பின்னர் துர்கா தேவியை சமாதானப்படுத்தி கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இந்த சம்பவமானது நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.