மனைவியின் ஆடைகளை களைந்து, மொட்டையடித்து ஊர்வலம் அனுப்பிய கணவன்! அதிர வைக்கும் காரணம்!

தகாத உறவு வைத்திருந்த  மனைவியை மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவமானது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலத்தில் பலாசூர் எனும் மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் சனாகலிய படா எனும் கிராமம் அமைந்துள்ளது. கிராமத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு உறவுக்கார நபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அவருடைய கணவர் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவருடைய மனைவி திருந்தவில்லை. இதனால் இருவர் மீதும் பெண்ணின் கணவர் கடுமையான கோபத்தில் இருந்தார். இதற்கிடையே கள்ளக்காதல் ஜோடியானது யாருக்கும் தெரியாமல் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து வந்துள்ளனர். இதனை அவருடைய கணவர் கண்டுபிடித்துள்ளார்.

வீட்டிற்கு வந்தவுடன் தன் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் தன் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றினார். மேலும் மனைவியின் தலையை மொட்டையடித்து. ஆடைகளை களைந்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து பெண்ணின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்‌. புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவமானது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.