அவனுடன் பழகாமல் இருக்க முடியாது! அடம் பிடித்த மனைவி! கணவன் அரங்கேற்றிய விபரீத சம்பவம்! மதுரை அதிர்ச்சி!

வேறொரு நபருடைய பழக்கத்தை நிறுத்த மறுத்த மனைவியை கணவர் அடித்து கொலை செய்திருப்பது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் எனும் இடம் அமைந்துள்ளது. நெடுங்குளம் வலசை பகுதியில் வெள்ளை பிரியன் என்பவர் வசித்து வருகிறார். 6 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த அபிநயா என்ற பெண் மீது காதல் வயப்பட்டார். காதலுக்கு தன்னுடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் வெள்ளைப்பிரியன், அபிநயாவை வெற்றிகரமாக திருமணம் செய்து கொண்டார். அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி இருவரும் வாழ்ந்து வந்தனர். 

இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே அபிநயாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறொரு ஆண் நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அளவுக்கு அதிகமாக நெருங்கி பழகி வந்ததை கண்ட வெள்ளைபிரியன், அவருடைய தொடர்பை விட்டுவிடுமாறு மனைவியிடம் பல முறை எச்சரித்துள்ளார்.

இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி கடுமையான சண்டைகள் ஏற்பட்டுள்ளன. இதேபோன்று நேற்று இரவு கணவன் மனைவி இடையே பலத்த தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த வெள்ளைபிரியன், அபிநயாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார். பின்னர் அபிநயாவின் உடல்நிலை ஆழ்கிணறு போட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார்.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் அபிநயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வெள்ளைபிரியனை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.