மச்சினிச்சியின் நிர்வாணப் படங்கள்! ஆசைக்கு இணங்க வைக்க இளைஞர் செய்த விபரீத செயல்!

மனைவியின் தங்கையின் நிர்வாணப் படங்களை இணையதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க அழைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஒடிசா மாநிலத்தில் கேந்திரப்பாரா மாவட்டத்தில் உள்ள ரகுதேய்ப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிக். இந்த நபருக்கு மனைவியின் தங்கையான 25 வயதுப் பெண் மீது ஒரு கண் இருந்ததாகவும், ஆனால் அந்தப் பெண் அதற்கு தொடர்ந்து மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்தப் பெண் குளிக்கும் போது, உடை மாற்றும் போது நிர்வாண நிலையில் இருந்த சந்தர்ப்பங்களில் மறைந்து நின்று புகைப்படம் எடுத்த நபர், அதனைத் தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்க மறுத்தால் அனைவரும் காணும் வகையில் அந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. 

பொறுத்துப் பார்த்த அந்தப் பெண் ஒரு கட்டத்தில் நேராக காவல் நிலையத்தை அணுகி தனது சகோதரியின் கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மல்லிக்கை வளைத்துப் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்த போலீசார் அந்த நபரிடம் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவன் தான் செய்த கீழ்த்தரமான செயல்களை ஒப்புக்கொண்டான். இதையடுத்து அவன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அவன் செல்போனில் மச்சினிச்சியின் ஆபாச படங்கள் இருந்ததை கண்டு போலீசார் அழித்தனர்.