ஷாப்பிங்கில் மனைவி செய்த அட்ராசிட்டி! பதிலுக்கு கணவன் செய்த தரமான செயல்! வைரலாகும் சூப்பர்மார்கெட் அடாவடி!

மனைவியின் பகட்டான ஷாப்பிங்கினால் பதறிப்போன கணவர் செய்த செயல் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.


தமிழ்நாட்டின் பெண்களுடன் ஆண்கள் ஷாப்பிங் சென்ற அன்றைய பொழுதே அவர்களுக்கு முடிந்துவிடும். கடைக்கு கடை மாறி பொருட்களை வாங்கி அலசி ஆராய்வதில் நம்மூர் பெண்களுக்கு இணையானவர்கள் வேறு எவரும் இல்லை. இன்னிலையில் மனைவியுடன் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற கணவர் செய்த செயலானது அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

அப்பாவியான முக பாவனையை கொண்ட கணவர், ட்ராலியை பொறுமையாக நகர்த்தி வருகிறார். அவருடைய மனைவி ஒவ்வொரு இடத்திலும் நின்று 2 அல்லது 3 பொருட்களை ட்ராலிக்குள் போடுகிறார். ட்ராலியை எடுத்து செல்வது கணவருக்கு கடினமாகி கொண்டே போனது.

அந்தப்பெண் அதன்பின்னர் எடுத்துப் போடும் ஒவ்வொரு பொருளையும் பின்னால் வரும் கணவர் எடுத்த அதே வரிசையில் வைத்து விடுகிறார். இது தெரியாமல் அந்த பெண் தொடர்ந்து பொருட்களை எடுத்துக்கொண்டு டிராலியில் போட்டு கொண்டே போகிறார்.