வீடியோ காலில் மனைவியுடன் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்த கணவர் திடீரென்று தீ விபத்தில் இறந்துபோன சம்பவமானது சூடான் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பா எப்படி இருக்கானு கேட்டு பேசிட்டு இருந்தாரு..! வீடியோ காலில் மனைவி கண் முன் கணவனுக்கு ஏற்பட்ட பயங்கரம்!
சூடான் நாட்டின் தலைநகர் கார்டோமின் பஹிர். இங்கு கண்ணாடி துகள்களை மூல பொருட்களாக கொண்ட தொழில்பேட்டை ஒன்று இயங்கி வருகிறது. இது ஒரு செராமிக் தொழிற்சாலை ஆகும். இந்த தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று வழக்கம் போல ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக தொழிற்சாலைக்குள் நின்றுகொண்டிருந்த டாங்கர் லாரி திடீரென்று வெடித்து சிதறியது. மளமளவென செராமிக் தொழிற்சாலைக்குள் தீ பரவியுள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 23 பேர் இறந்துள்ளதாகவும், 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரின் தொழிற்சாலையில் பணியாற்றி வந்திருந்தார். இவருடைய மனைவியின் பெயர் கலைச்சுந்தரி. இத்தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையுள்ளது.
விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களுக்கு முன்னர் இருவரும் வீடியோ காலில் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ராஜசேகரன் பின்னால் தீ பரவியதை கண்டு அவருடைய மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின்னர் ராஜசேகரும் அலறி அடித்துக்கொண்டு போனை துண்டித்துள்ளார். பதறிப்போன கலைச்சுந்தரி உடனடியாக உறவினர்களின் மூலம் இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்த 23 பேர்களில், 18 பேர் இந்தியர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ராஜசேகரும் இறந்து போனார் என்ற சோக செய்தி கடலூர் மாவட்டத்தை வாட்டி வருகிறது.
இந்த சம்பவமானது சூடான் நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.