என் கணவன் தான் காரணம்..! வாட்ஸ்ஆப் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த நடுத்தர வயது மனைவிக்கு ஏற்பட்ட பயங்கரம்!

வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியை கணவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமை சேர்ந்தவர் சுனில் கோத்ரா. இவரது மனைவி முனேஸ் பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். சுனில் கோத்ராவுக்கு தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அவரது மனைவி கட்சி விஷயம் சார்பாக போனது யாரிடமாவது பேசிக் கொண்டிருந்தாலும் கூட அதை சந்தேகக் கண்ணோடு அவரது கணவர் பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சுனில் கோத்ராவின் மனைவி முனேஸ் தன்னுடைய சகோதரியிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். இதைக்கண்டு தவறாக புரிந்து கொண்ட கணவன் சுனில் கோத்ரா மனைவியை தனது கையிலிருந்த துப்பாக்கியால் இருமுறை சுட்டுள்ளார். இதனால் வலியில் துடித்த அவரது மனைவி தனது சகோதரியிடம் என் கணவர் என்னை சுட்டு விட்டார் என்று கூறியபடியே உயிரை விட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தலைமறைவாகியுள்ள கணவர் சுனில் கோத்ராவை வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.