கடைசியா கணவனுடன் தான் போனில் பேசினா..! ரெண்டு பிள்ளைகளை விட்டுட்டு இப்டி செஞ்சிட்டாளே! கதறும் தமிழரசி குடும்பம்!

குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே வெலக்கல்நத்தம் எனும் இடம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமாவாசை என்பவர் வசித்து வருகிறார்‌. இவருடைய மகளின் பெயர் தமிழரசி.

நாட்றம்பள்ளி அருகேயுள்ள அக்ராகரம் ஆசாரி வட்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் வஜ்ரம். இவருடைய மகனின் பெயர் சிங்காரவேல். சிங்காரவேல் பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். 2012-ஆம் ஆண்டில் சிங்காரவேலுக்கும் தமிழரசிக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 

சிங்காரவேலின் வீட்டில் அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இதனால் மாமியார் மருமகளின் சண்டைகள் அதிகரித்த வண்ணமிருந்தன. சில நாட்களுக்கு முன்னர் மாமியார் மருமகள் வழக்கம்போல சண்டை போட்டுக்கொண்டனர். உடனடியாக சிங்காரவேல் தன் மனைவியை அவருடைய சொந்த வீட்டில் தங்கியிருக்குமாறு கூறி அழைத்து சென்றார்.

நேற்று தமிழரசியின் தாயார் வெளியே சென்றிருந்தார். அப்போது தமிழரசி சிங்காரவேலு செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பேசிய சிங்காரவேல் மனைவியை கொஞ்சம் கடிந்துள்ளார். இதனால் மனமுடைந்து போன தமிழரசி யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழரசியின் பெற்றோர் அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து தமிழரசியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழரசியின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.