வேறு ஆணுடன் செல்போனில் பேசிய காதல் மனைவி! கண்டுபிடித்த கணவன் அரங்கேற்றிய கொடூரம்!

வேறு ஒரு ஆணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளான்.


நாகை மாவட்டத்தில் வாய்மேடு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு அருகே ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி உள்ளது. இங்கு வசித்து வருபவர் கணேசன். இவருக்கு செல்வவிநாயகம் என்ற மகன் உள்ளார். அவரின் வயது 38. இவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பானு என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.  இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

திருமணமான சில ஆண்டுகள் சந்தோஷமாக இருந்தாலும், தகராறுகள், சண்டை சச்சரவுகள் ஆகியன மெதுவாக ஊடுருவ தொடங்கின. இருவரும் அடிக்கடி தேவையற்ற காரணங்களுக்காக கூச்சலிட்டு சண்டை போட்டுக் கொள்ளும் வழக்கம் உருவாகியது. பலமுறை பானு செல்வவிநாயகத்திடம்  கோபித்துக்கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவார். பின்னர் இருவரின் பெற்றோரும் அவரை சமாதானம் செய்து மீண்டும் செல்வவிநாயகர் வீட்டிற்கு அழைத்து வருவர்.

இந்த நிலையில் பானு அடிக்கடி செல்போனில் வேறு ஒரு ஆணுடன் பேசியுள்ளார். இதனால் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் இருவருக்கும் சண்டை உருவானது. வீட்டில் பெரியவர்கள் இல்லாதபோது சண்டை ஏற்பட்டதால் சமாளிப்பதற்கு யாருமில்லை. இதனால் சண்டை தொடரத் தொடர இருவருக்கும் கோபம் தலைக்கு மேலே ஏறியது. ஒரு கட்டத்தில் தன் கட்டுப்பாட்டை இழந்த செல்வவிநாயகம் பானுவை அரிவாளால் வெட்டினார்.

பானுவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். சம்பவ இடத்திலேயே பானு உயிரிழந்தார். அவர்கள் இந்த கொலை சம்பவத்தை பற்றி வாய்மேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் பானுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக செல்வநாயகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது வாய்மேடு பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.