பேஸ்புக்கில் பல ஆண்களுடன் தகாத உறவு! லேட் நைட் சேட்டிங்! மனைவிக்கு கணவனால் நேர்ந்த விபரீதம்!

பேஸ்புக்கிற்கு அடிமையாகி இருந்த மனைவியை கணவன் ஒருவர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவமானது சங்கரன்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சங்கரன்கோவிலில் கட்டிடத் தொழில் வேலை பார்த்து வருபவர் கோமதி நாயகம். இவரின் மனைவியின் பெயர் முத்துமாரி என்பதாகும். முத்துமாரி தன் கணவரிடம் தனக்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கித் தருமாறு கூறியுள்ளார். மனைவியின் ஆசையை நிறைவு செய்வதற்கு கோமதிநாயகம் ஒரு ஸ்மார்ட் போனை வாங்கி கொடுத்தார்.

ஸ்மார்ட்போன் வந்தவுடன் முத்துமாரி அதிலேயே மூழ்கிக்கிடந்தார். இதனால் பலமுறை கணவன் மனைவி இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டுள்ளன. முத்துமாரியின் நடவடிக்கைகள் கோமதி நாயகத்திற்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று மாலையில் வழக்கம்போல முத்துமாரி பேஸ்புக்கில் தனது நண்பர்களுடன் சாட் செய்து கொண்டிருந்தார்.

இதனால் மிகவும் ஆத்திரம் அடைந்த கோமதிநாயகம் அரிவாளால் முத்துமாரியை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் யாரும் அறியாதவாறு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நெடுநேரம் கழித்து உறவினர்கள் அவருக்கு தகவல் தெரிவிக்க அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து கதறி அழுதுள்ளார்.

உறவினர்களுடன் இணைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் கோமதி நாயகத்தின் வீட்டிற்கு வந்து முத்துமாரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வீட்டில் மோப்ப நாயை சுற்றவிட்டு காவல்துறையினர் சோதனை நடத்தினர். மோப்பநாய் அவனது வீட்டை சுற்றி சுற்றியே வந்ததுள்ளது. கைரேகை நிபுணர்களை வைத்து சோதனை நடத்தியதில் கோமதி நாயகத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னர், 2 நாட்களாக கோமதி நாயகத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. "என் மனைவி நீண்ட நேரமாக பேஸ்புக் பயன்படுத்தி வந்ததால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பேஸ்புக் மூலம் பல ஆண்களுடன் அவர் சாட் செய்து வந்தார்.அவரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அதனையே செய்து வந்தார். ஆத்திரமடைந்து 2 நாட்களுக்கு முன்பு அரிவாளால் அவரை வெட்டி சாய்த்தேன்" என்று கோமதிநாயகம் வாக்குமூலம் அளித்துள்ளார்

வாக்குமூலத்தின் அடிப்படையில் அப்பகுதி காவல்துறையினர் கோமதி நாயகத்தை கைது செய்துள்ளனர் மேலும் அவர் பயன்படுத்திய அரிவாளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த துயர சம்பவமானது சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.