உன் பிரண்ட் நான் டிரஸ் மாத்துறத எட்டிப் பார்க்குறான்! கண்கலங்கிய மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட பயங்கரம்!

மனைவி உடைமாற்றுவதை நண்பர் எட்டி பார்த்த சம்பவத்தில் மனைவியை கொன்றுள்ள சம்பவமானது பெருங்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெருங்குடியில் கல்லுப்பட்டி எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு உதய குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் மணிமேகலை என்னும் பெண்ணை திருமணம் செய்தார். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு 6 வயதில் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உதயகுமார் தன் நண்பர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இது கணவன் மனைவியிடையே கடும் வாக்குவாதங்களை ஏற்படுத்தியது. ஆனால் உதயகுமார் மனைவியின் வார்த்தைகளை மதிக்காமல் மீண்டும் மீண்டும் இதனை செய்து வந்துள்ளார். உதயகுமாருக்கு மாணிக்கவேல் என்ற நண்பர் உள்ளது குறிப்பிடத்தக்கது ‌

நேற்று உதயகுமார் வழக்கம் போல தன் நண்பர்களை அழைத்து வந்து வீட்டில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது மணிமேகலை உடை மாற்றிக்கொண்டிருந்த அறைக்கு அவரது நண்பர் மாணிக்கவேல் சென்றுள்ளார். அப்போது மணிமேகலைக்கும், மாணிக்கவேலுக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் உன் பிரண்ட் நான் டிரஸ் மாத்துறத எட்டிப்பார்ப்பதாக கணவனிடம் கூறி கலங்கியுள்ளார். ஆனால் கணவன் இதனை கண்டுகொள்ளவில்லை. அப்போது மாணிக்கவேல் மணிமேகலையை தகாத வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது. ஆவேசப்பட்ட மணிமேகலை துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி புகாரளித்தார்.

புகாரளித்து விட்டு வீடு திரும்பிய மணிமேகலையை கணவர் உதயகுமார் கத்தியால் பல இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மணிமேகலையை அக்கம்பக்கத்தினர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

காவல்துறையினர் உதயகுமாரின் மீது மனைவியை கொன்ற குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள உதயகுமாரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது பெருங்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.