மனைவியை முன்னாள் கணவனே கொலை செய்த சம்பவமானது கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் தமிழ்ப்பெண் கொடூர கொலை! கணவனை பிரிந்து வாழ்ந்தவருக்கு நேர்ந்த பயங்கரம்!

தர்ஷிகா என்ற பெண் இலங்கைவாழ் தமிழராவார். இவருடைய வயது 27. இவர் இலங்கையில் வசித்த போது தனபாலசிங்கம் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
வேலை நிமித்தமாக தனபாலசிங்கம் கனடா நாட்டிற்கு இடம்பெயர்ந்தார். தர்ஷிகா இலங்கை நாட்டிலேயே தங்கியிருந்தார். இதனிடையே 2017-ஆம் ஆண்டில் கணவருடன் வாழ்வதற்காக தர்ஷிகா கனடா நாட்டிற்கு சென்றார்.
அப்போது கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இருவருக்கும் ஏற்பட்ட தகராறுகளை உறவினர்களால் தீர்த்து வைக்க இயலாததால் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்திக்க கூடாது என்று தீர்ப்பளித்திருந்தார்.
தீர்ப்பையும் மீறி தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்தித்துள்ளார். மேலும் கத்தியை கையில் எடுத்துக்கொண்டு துரத்தி சென்றுள்ளார். இதனை பொதுமக்கள் பலர் கண்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தர்ஷிகாவை தனபாலசிங்கம் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர் காவல் நிலையத்தில் தனபாலசிங்கம் சரணடைந்தார். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை வரும் புதன்கிழமை தள்ளிவைத்தனர்.
இந்த சம்பவமானது கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.