கணவனுக்கு வயது 53 ஆகிடிச்சி..! அதுதான் 33 வயது இளைஞருடன் சேர்ந்து 40 வயது காஞ்சனா செய்த தகாத செயல்! பிறகு?

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலன் உதவியுடன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.


நாட்றம்பள்ளி அருகே தையல் கலைஞரான கோவிந்தராஜ், (வயது 53) மனைவி காஞ்சனா (வயது 40) மற்றும் நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவருக்கும் குப்புசாமி ( வயது 33) என்பவருக்கும் திருமண பந்தத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர் கோவிந்தராஜ் மனைவி காஞ்சனாவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காஞ்சனா கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினார். பின்னர் தன்னுடைய ஆசை நாயகனுக்கு போன் செய்து கணவரை தீர்த்துக் கட்டிவிட்டால் சந்தோஷமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய குப்புசாமி ஒரு புதிய நாட்டுத் துப்பாக்கி வாங்கி தனது நண்பர்கள் 2 பேர் உதவியுடன் கோவிந்தராஜை சுட்டுத் தள்ளியுள்ளார். தொடர்ந்து 14 குண்டுகள் பாய்ந்தவுடன் கோவிந்தராஜ் மயங்கி விழுந்தார். கடந்த 4ம் தேதி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கோவிந்தராஜ் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதை அடுத்து கோவிந்தராஜ் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் உடலில் 14 நாட்டு துப்பாக்கிக் குண்டுகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இதையடுத்து காஞ்சனா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை துருவி துருவி விசாரணை செய்தனர். விசாரணையில் காஞ்சனாவுக்கும் குப்புசாமிக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தினர். குப்புசாமியை காவல் நிலையம் அழைத்து வந்து இருவரிடமும் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், கோவிந்தராஜை கொலை செய்ததாக குப்புசாமி ஒப்புக் கொண்டார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.