நள்ளிரவில் கணவன் ரூமுக்குள்ள சென்ற மனைவி! அங்கு அவர் கண்ட பகீர் காட்சி! திருமணமாகி ஓராண்டிற்குள் இப்படியா?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருமணமாகி ஒரே ஆண்டில் கணவர் ஒருவர் தன் மனைவியுடன் ஏற்பட்ட சிறிய தகராறால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் நிகில் என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பாக தான் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்பு தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நிகில் தன் மனைவியுடன் சண்டையிட்டு இருக்கிறார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சிறிய தகராறால் நிகில் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை பூட்டி இருக்கிறார்.

கதவை மூடிக்கொண்டு உள்ளே இருந்த நிகில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அச்சம் அடைந்த அவரது மனைவி கதவைத் தட்டி இருக்கிறார். வெகுநேரமாக தட்டியும் நிகில் கதவை திறக்கவில்லை. இதனால் பதறிப்போன அவரது மனைவி உடனடியாக குடும்பத்தினரை அழைத்து இது பற்றி கூறியிருக்கிறார். அங்கு வந்தவர்கள் கதவை உடைத்து அறைக்குள் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

நிகில் மனமுடைந்து தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிகில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தகவலறிந்து வந்த போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடமும் மனைவியிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில், சிறிய சிறிய பிரச்சினைகளுக்குக் கூட அவரும் அவரது மனைவியும் சண்டை போடும் பழக்கத்தை உடையவர்கள் ஆவர். ஆகையால் நேற்று முன்தினம் கூட வெகுநேரமாக தன் குடும்பத்தினருடன் உரையாடிவிட்டு தான் நிகில் சென்றிருக்கிறார். பின்னர் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தாங்க முடியாமல் தான் நிகில் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.