வெளிநாட்டில் கணவன்! சமையல் அறையில் வைத்து 40 வயது மனைவி செய்த செயல்..! அதிகாலையில் அங்கு மாமியார் கண்ட காட்சி!

கேரளாவில் வசிக்கும் பெண் ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்க்கும் தன் கணவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற பயத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு நந்தியார் குளங்கரை பகுதியை சேர்ந்தவர் பிஜூகுமார் என்பவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமா கோவிந்த் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கேரளாவில் வசித்து வருகின்றார்கள். பிஜூகுமாரின் மனைவி ஹரிப்பாடு நந்தியார் குளங்கரை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கொரோனாவின் வீரம் இந்தியாவில் அதிகரித்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் , விடிகாலையில் பிரேமாவின் மாமியார் சவுதமினி தூக்கத்தில் இருந்து எழுந்த போது வீட்டு சமையலறை திறந்திருப்பதை கண்டு அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்த இடத்தில் பிரேமா தீயில் கருகி இறந்த நிலையில் காணப்பட்டார். இதனை பார்த்த மாமியார் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் அருகில் மண்ணெண்ணெய் போத்தல் பார்த்தும் அதிர்ந்து போனார். 

இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர். பின்னர் பிரேமாவின் சடலத்தை கைப்பற்றி கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர், காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், சவுதியில் வேலை பார்க்கும் பிரேமாவின் கணவர், பிஜூகுமார் அறையில் தங்கிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் பிஜூகுமாரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். இதனை அறிந்த பிரேமா மிகுந்த மனக்கவலை அடைந்தார். 

தனது மனக்கவலையினை போக்க, தன்னுடன் பணியாற்றும் ஆசிரியையிடம் அடிக்கடி தொலைப்பேசியில் உரையாடி வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் தனது கணவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார் பிரேமா.

இதனையடுத்து, பிரேமா தனது கணவரை நினைத்து நினைத்து கவலைப்பட்டு தற்கொலை செய்து கொல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளார் என காவல்துறையினர் தனது விசாரணையில் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பிரேமா எழுதி வைத்திருந்த கடிதத்தில், மனநிலை பிரச்சனையில் இருந்து தன்னால் மீள முடியவில்லை எனவும் கணவருக்கு தான் தொல்லையாக இருக்க விரும்பவில்லை எனவும் எழுதப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சவுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிஜூகுமார் மனைவியின் இறுதிச்சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது. இப்போது ஏற்பட்டு இருக்கும் சூழ்நிலையில், கொரோனாவினால் ஏற்படும் இறப்புகளை விட கொரோனாவின் மனநிலை பிரச்சனை இறப்புகள் தான் அதிகமாகி இருகின்றது.