மனைவி விட்ட சாபம்..! அடுத்தடுத்து 14 பேர் துர் மரணம்..! தப்பிக்க பெண் உடையில் வாழ்க்கையை ஓட்டும் கணவன்..! திடுக் சம்பவம்!

மணமகள் விட்ட சாபமானது குடும்பத்தில் 14 உயிர்களை படுத்திருப்பது உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜான்பூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு சிந்தாஹரன் சவுகான் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய வயது 66. இவர் தன்னுடைய இளமை காலமான 14 வயதில் முதன் முறையாக திருமணம் செய்து கொண்டார். அவருடைய முதல் மனைவி சில வருடங்களிலேயே இறந்து போனார். 

21 வயது நிரம்பிய போது மேற்கு வங்காள மாநிலத்தில் செங்கல் சூளை பணிக்காக தினாஜ்புர் என்னும் இடத்திற்கு சென்றார். அங்கு தொழிலாளர்களின் உணவுக்காக தானியங்களை கொள்முதல் செய்யும் வேலையில் பணியமர்த்தப்பட்டார். 4 ஆண்டுகள் பிறகு அந்த கடை உரிமையாளரின் மகளை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணத்திற்கு சௌஹானின் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் சௌஹான் தன் 2-வது மனைவியை மேற்குவங்கத்தில் ஏமாற்றி விட்டுவிட்டு உத்திரபிரதேசத்திற்கு சென்றார்.

கணவர் தன்னை பிரிந்ததால் துயருற்ற அந்த பெண், சில மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தியை அடுத்த ஆண்டு சவுகான் மேற்குவங்கத்திற்கு வந்தபோது தெரிந்து கொண்டார். உத்தரபிரதேசத்திற்கு சென்ற போது அவருக்கு 3-வது திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு அவருடைய வாழ்வில் அனைத்தும் இறங்கு முகமாகவே அமைந்தது.

இவருடைய தந்தை ராம் ஜியவன், மூத்த சகோதரர் சோட்டாவ், அவரது மனைவி இந்திராவதி, அவர்களது இரண்டு மகன்கள், தம்பி படாவ் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். பின்னர் சகோதரர்கள், மூன்று மற்றும் 4 மகள்கள் இறந்து போயினர். இவருடைய கனவுகளில் பெங்காலி மனைவி அடிக்கடி தோன்றியுள்ளார்.

அப்போது அவர் சவுகானிடம், தன்னை ஏமாற்றி விட்டு சென்றதற்காக கோபப்பட்டுள்ளார். கனவில் தன்னை மன்னித்து விடுமாறு சவுகான் கேட்டபோது, "வாழ்நாள் முழுவதும் மணமகளாக உடையணிந்தால் நான் உங்கள் அருகில் இருப்பது போல தோன்றும். ஆதலால் எந்த துயரமும் நிகழாது" என்று கூறியிருந்தார். 

அன்றிலிருந்து சவுகான் மணமகள் வேடமணிந்து வாழ்ந்து வருகிறார். குடும்பத்தில் எந்த ஒரு துயர சம்பவமும் அரங்கேறவில்லை. என்னுடைய மகன்கள் மிகவும் நலமாக உள்ளனர். நானும் உடல்நலத்தில் தேர்ச்சி அடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்‌. 

இந்த செய்தியானது உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.