10 வயதில் மகன்..! 7வயதில் மகள்..! 28 வயது சித்ராவுக்கு தீராத ஏக்கம்..! அதனால் அவர் எடுத்த பதற வைக்கும் முடிவு!

குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது தாரமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட கோட்டைமேடு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரங்கன் இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்‌. இவருடைய வயது 52. இவருக்கு 28 வயதான சித்ரா என்ற மகள் உள்ளார். 11 வருடங்களுக்கு முன்னர் ரங்கன், சித்ராவை வீரனூர் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

இத்தம்பதியினருக்கு பிரவீன் என்ற 10 வயது மகனும் பானு என்ற 7 வயது மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவி இடையே கடுமையான குடும்ப தகராறுகள் ஏற்பட்டு வந்தன. இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாமனார் ரங்கன் வீட்டில் மணிவண்ணன் விட்டு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் காலை நேரத்தில் தன்னுடைய பிள்ளைகளை மாமனாரின் வீட்டிலிருந்து உறவினர்கள் மூலம் தன் வீட்டிற்கு மணிவண்ணன் அழைத்து வந்துள்ளார். முதலில் கணவரை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சித்ரா, பின்னர் குழந்தைகளும் தன்னை விட்டு பிரிந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மன அழுத்தம் அதிகமான காரணத்தினால் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மகள் தன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தாங்க இயலாமல் ரங்கன் கதறி அழுதார். பின்னர் அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சித்ராவின் உடலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனுப்புவதற்கு முன்பாக இரு குழந்தைகளும் தங்களுடைய தாயின் உடல் மீது கட்டிப்புரண்டு கதறி அழுத காட்சிகள் அங்கிருந்த அனைவரையும் உருக வைத்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலையானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.