கணவனின் நண்பனுடன் தனிமை! கண்டுபிடித்த கணவன்! பிறகு அரங்கேறிய கொடூரம்!

நாமக்கல்லிலுள்ள தோட்டப் பகுதியில் தாய் மற்றும் குழந்தை கழுத்தறுந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி என்னும் ஊர் அமைந்துள்ளது இதன் அருகே மாணிக்கவேலூர் என்ற கிராமம் அமைந்துள்ளது இங்கு சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த கிராமத்திற்கு அருகே உள்ள கஸ்தூரிப்பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் கௌரி.

இவரும் சுரேஷும் நான்காண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். மேலும் இத்தம்பதியினருக்கு புகழ்வின் என்ற குழந்தையும் உள்ளது. சுரேஷும், கௌரியும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும், அவர்களுக்குள் கடுமையான சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் நேற்று சுரேஷ், தன் மனைவி மற்றும் குழந்தையுடன் தங்களின் சொந்த தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

பல மணிநேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களின் குடும்பத்தினர், தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியான காட்சிகள் காத்திருந்தன. கௌரி மற்றும் புகழ்வின் கொடுமையான முறையில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். சுரேஷும் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்குப் போராடி கொண்டிருந்தார்.

பின்னர் அவரை அவரின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் எருமப்பட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். காவல்துறையினர் தங்களது விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், நான்கு நாட்களுக்கு முன்பு சுரேஷின் நண்பரான வீரக்குமார் வீட்டில் யாரும் இல்லாத போது கௌரியை பார்க்க சென்றுள்ளார்.

மேலும் பல மணி நேரம் கழித்தே வீரகுமார் வீட்டைக் விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.  ஆதலால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இத்தகைய செயலில் சுரேஷ் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சுரேஷ் சிறிது நலம் அடைந்த பிறகு விசாரணையை தொடங்க உள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது எருமப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.