முதலாம் ஆண்டு திருமண நாள்..! இளம் மனைவிக்கு மரணத்தை பரிசாக அளித்த 21 வயது கணவன்! பதற வைக்கும் காரணம்!

பஞ்சாபில் முதலாம் ஆண்டு திருமண நாளில் கணவன் தன்னுடைய மனைவியை கழுத்தை நெரித்து கொலை இது விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர்  நகர் பகுதியில் வசித்து வருபவர் பைசன் (வயது 21). இவர் ஷப் நகூர் (வயது 21) என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவான இந்த தம்பதியினருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமண நாள் வந்தது. திருமண நாளின் இந்த தம்பதியினருக்கு இடையே மிகப்பெரிய போராட்டம் நிலவியிருக்கிறது.

திருமண நாளின் போது இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பைசன் தன்னுடைய செல்போன் சார்ஜர் ஒயரை பயன்படுத்தி தன் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார். பின்னர் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி ரயிலில் சென்றிருக்கிறார் . அப்போது யாருமே எதிர்பாராத விதமாக அதி வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணங்களை பைசனின் குடும்பத்தாரிடம் கேட்டறிந்தனர். அவராக விசாரிக்கும் பொழுது பைசனின் தந்தை தில்சத் தன்னுடைய மருமகளைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறினார்.

அதாவது தன்னுடைய மருமகளுக்கு பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருப்பதாகவும் அதைப் பற்றி கண்டித்தால் தன்னுடைய மகனை உதாசீனப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என கூறினார். அதிலும் குறிப்பாக கொலை நடைபெற்ற அன்று இருவருக்கும் திருமண நாள் ஆகும் அப்போது பைசன் இன் மனைவி கண்டிய கணவரிடம் திருமணநாள் பரிசு எங்கே என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு பைசன் சரியாக பதிலளிக்கவில்லை இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பலத்த சண்டை ஏற்பட்டுள்ளது இந்த சண்டையில் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக பைசன் 2 செல்போன் சார்ஜர் ஒயரை எடுத்து தன் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.அதற்கு பின்பு தான் பைசன் ரயிலில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.