60 வயதில் என் மனைவி செய்யும் வேலையா அது? உயிரோடு கொளுத்திய 65 வயது கணவன்! அதற்கு அவர் கூறிய பகீர் தகவல்!

திருப்பத்தூரில் 65 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியை உறங்கிக் கொண்டிருந்த பொழுது உயிரோடு கொளுத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூரில் தியாகி சிதம்பரனார் தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் சேஷாசலம் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு வயது 65. இவரது மனைவி பெயர் மல்லிகா (வயது 60). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில் கணவன் மனைவி இருவர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். சேஷாச்சலம், நகை அடகு கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக சேஷாசலத்திற்கு வெள்ளை தழும்பு நோய் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த வெள்ளைத் தழும்புகள் அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது. 

உடல் முழுவதும் இந்த வெள்ளைத் தழும்புகள் பரவியதால் சேஷாசலத்தின் மனைவி மல்லிகா அவரை மனது புண்படும்படி அடிக்கடி பேசி வந்திருக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சேஷாசலம் தனது மனைவியின் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார். ஆகையால் தன்னுடைய வயது முதிர்ந்த மனைவியை கொலை செய்து விடலாம் என்றும் திட்டம் தீட்டி இருக்கிறார். இதனையடுத்து இருவரும் நேற்றையதினம் படுக்கைக்கு உறங்க சென்றுள்ளனர்.

நேற்று இரவு 11 மணி அளவில் மல்லிகா நன்றாக தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ இட்டு கொளுத்திருக்கிறார் சேஷாசலம். உடனே உடல் முழுவதும் தீ பரவியதால் அலறித் துடித்து இருக்கிறார் அவரது மனைவி மல்லிகா. உடல் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலேயே மல்லிகா உடல் எரிந்து உயிரிழந்திருக்கிறார். இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

பின்னர் மனைவியை தீவைத்து கொளுத்திய சேஷாசலத்தை கைது செய்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் ஆரம்பத்தில் இருந்து என்னுடைய மனைவியின் நடவடிக்கைகள் எதுவும் சரி இல்லை.. எப்போதும் போனும் கையுமாக தான் இருப்பார். அதிலும் எனக்கு வெள்ளைத் தழும்புகள் வந்த உடன் என்னை அருவருப்பாக பார்க்க ஆரம்பித்துவிட்டார். அதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி என் மனைவியை நான் கொன்று விட்டேன் என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.