நான் இருக்கும் போது படுக்கை அறையில் யார் இவன்? திடீரென வந்த கணவன் கேட்ட கேள்வி! பதறிய மனைவியால் ஏற்பட்ட விபரீதம்! சாத்தூர் அதிர்ச்சி!

மனைவியுடன் உல்லாசமாக இருந்த இளைஞரை கணவர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவமானது விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள நாராயணபுரம் என்ற இடத்தில் விக்னேஷ்குமார் என்ற 26 வயது இளைஞர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் தனலட்சுமி. தனலட்சுமியின் வயது 26. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

விக்னேஷ்குமார் சிவகாசியிலும், தனலட்சுமி சாத்தூர் அருகேயுள்ள படந்தாள் என்ற இடத்திலும் வசித்து வந்தனர். இந்நிலையில் தனலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற 25 வயது இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தகாத உறவில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே நேற்று நள்ளிரவு திடீரென்று தனலட்சுமியின் வீட்டிற்கு அவருடைய கணவர் விக்னேஷ்குமார் வருகை தந்துள்ளார்.‌ கணவர் வீட்டிற்கு வருவார் என்பதை எதிர்பாராத தனலட்சுமி வீட்டில் சதீஷுடன் தனிமையில் இருந்துள்ளார். தன்னுடைய மனைவியை கள்ளக்காதலனுடன் பார்த்து விக்னேஷ்குமார் கடும் ஆத்திரம் அடைந்தார்.

பின்னர் அருகில் இருந்த கல்லை எடுத்து சதீஷின் தலையில் போட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சதீஷை தனலட்சுமியின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சதீஷ் உயிரிழந்தார்.

சம்பவமறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த சாத்தூர் காவல்துறையினர் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள விக்னேஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். 

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.