ஒரே வீட்டுக்குள் கணவன் - மனைவி சடலத்துடன் கொழுந்தன் சடலம்! அங்கு சென்று பார்த்தவர்கள் கண்ட காட்சி!

மனைவியை சுட்டுக்கொலை செய்த கணவர் தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமானது உத்திரப் பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் அலிகார் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு ஷைலேந்திரா என்பவர் வசித்து வந்தார். இவர் பிங்கி என்ற இளம்பெண்ணை ஓராண்டுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். ஷைலேந்திராவின் தம்பியின் பெயர் விஷால். 3 பேரும் ஒரே வீட்டிலேயே வசித்துவந்தனர். இவர்களுடன் ஷைலேந்திராவின் தாயாரும் வசித்து வந்தார்.

ஷைலேந்திரா தொடர்ந்து தன்னுடைய மனைவி மற்றும் தாயாருடன் சண்டை போடு வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல ஷைலேந்திரா தன்னுடைய மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். சில நிமிடங்களிலேயே பேஸ்புக் நேரலையில் ஷைலேந்திர தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினார். தன்னுடைய குடும்பத்தினருடன் செயல்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறினார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே தன்னுடைய மனைவி பிங்கியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சத்தத்தை கேட்டவுடன் விஷால் விரைந்து சென்றார். அப்போது தன்னுடைய சகோதரரும் அவருடைய மனைவியும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

பின்னர் தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் 3 பேரின் சடலங்களையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சைலேந்திர மற்றும் விஷால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மருத்துவமனைக்கு  செல்வதற்கு முன்பே பிங்கியும் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 உயிரிழந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.