உடலுறவுக்கு மறுத்த மனைவி! விரக்தியில் தனது மர்ம உறுப்பை வெட்டி வீசிய கணவன்! அதிர வைக்கும் சம்பவம்!

உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்து தன்னுடைய ஆணுறுப்பையும் கணவர் வெட்டிக்கொண்ட சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் சித்தார்த்நகர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு ஹசான் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வயது 24. இவருக்கு சில மாதங்கள் முன்னர்அதே பகுதியை சேர்ந்த மேஹ்னாஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

சில தினங்கள் முன்னர் ஹசான் தன் மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுள்ளார். ஆனால் மேஹ்னாஸ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தனக்கு உடலுறவில் விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார். ஒரு கட்டம் வரை பொறுத்து கொண்ட ஹசான் பொறுமை இழந்து மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

மேலும் தன்னுடைய ஆணுறுப்பையும் வெட்டி கொண்டுள்ளார். அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்து எட்டி பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதை கண்டு காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது மேஹ்னாஸ் உயிரிழந்து பிணமாக கிடந்தார். ஹசான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். 

இந்நிலையில் மேஹ்னாஸின் தந்தை சித்தார்த் நகர் காவல் நிலையத்தில், தன் மகளை வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி ஹசான் கொலை செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.