தவறான உடல் சார்ந்த தேடல்..! அண்ணன் மனைவியுடன் தகாத உறவு..! கண்டுபிடித்த மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட பயங்கரம்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவமானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் ஜவ்வாதுமலை என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அடுத்துள்ள ரங்கசமுத்திரம் என்னும் பகுதியில் லட்சுமணன் என்பவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகனின் பெயர் குமரேசன். இவருடைய வயது 28. இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் புதூர் பகுதியை சேர்ந்த நதியா என்ற 24 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் குமரேசனுக்கு தங்களது வீட்டிற்கு அருகே இருந்த அண்ணனின் மனைவியுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. குமரேசனின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த நதியா அதனை நிறுத்துமாறு அவரிடம் பலமுறை கூறியுள்ளார்.

இருப்பினும் குமரேசன் நதியாவின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்காமல் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். இதனை நதியா தன்னுடைய பெற்றோரிடம் கூறி அழுது புலம்பியுள்ளார். நதியாவின் தாயாரும் குமரேசனுக்கு மிகவும் பக்குவமான முறையில் எடுத்துரைத்தார். இருப்பினும் குமரேசன் திருந்திய பாடில்லை.

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வாடிக்கையாக அமைந்திருந்தது. கூலி வேலைக்காக நதியாவும் குமரேசனும் திருப்பத்தூருக்கு வந்தனர். அப்போது கேட்க ஆள் இல்லாததால் நதியாவை குமரேசன் கடுமையாக கொடுமைப்படுத்தியுள்ளார். 2 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பிணியாக இருந்த நதியாவை அடித்த போது அவருக்கு கரு சிதைவு ஏற்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு முன்னாள் கணவன் மனைவியிடையே வழக்கம் போல கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த குமரேசன் நதியாவை பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார்.

அதிர்ச்சி அடைந்த குமரேசன், நதியாவின் உடலை கிணற்றில் வீசி மாடு முட்டியதால் கிணற்றில் விழுந்ததாக கூறி நாடகம் ஆடியுள்ளார். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதை நதியாவின் தாயார் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் எடுத்துக்கூறினார். உடனடியாக நதியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் குமரேசன் கொலை செய்து இருப்பதை அறிந்து அவரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.