மனைவி உடலில் 60 இடங்களில் சதக் சதக்! ஈவிரக்கம் இல்லாத கணவன் வெறிச் செயல்! அதிர வைக்கும் காரணம்!

சொந்த மனைவியையே 60 இடங்களில் சரமாரியாக குத்தி கணவன் கொலை செய்திருக்கும் சம்பவமானது பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வங்காளதேச நாட்டை சேர்ந்தவர் ஜலாலுதீன். இவருடைய வயது 47. இவர் பிரித்தானியாவில் இந்திய சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அஸ்மா பேகம் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவருடைய வயது 31. திருமணமான சில மாதங்களிலேயே ஜலாலுதீன் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என்பதனை அஸ்மா கண்டுபிடித்துள்ளார்.

மேலும்‌ அஸ்மாவை தினசரி அடித்து துன்புறுத்தி பணத்தை எடுத்து சூதாட்டமாட ஜலாலுதீன் சென்றுவிடுவார். ஆனால் நடத்தும் சூதாட்டத்திலும் பெரும்பாலும் தோல்வியை தழுவியுள்ளார். மேலும் பண விவகாரத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி பயங்கரமான சண்டைகள் நடந்துள்ளன. 

2016-ஆம் ஆண்டில் அஸ்மா காவல் நிலையத்தில் ஜலாலுதீன் மீது புகாரளித்துள்ளார். சூதாட்ட மோகம் முற்றிய நிலையில் அஸ்மாவை அடித்து துன்புறுத்தி பணத்தை பெற்று சென்றுள்ளார். அஸ்மாவும் வலி தாங்காமல் பணத்தை கொடுத்து அனுப்பிவிடுவார்.

2 நாட்களுக்கு முன்னர் அஸ்மா தன் கணவரிடம் வங்கியில் இருந்து 200 பவுண்ட் எடுத்து பொருட்களை வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால், ஜலாலுதீன் பணத்தை எடுத்து சூதாட்டத்தில் தோற்றுவிட்டு மேலும் இவரது பாம்புகளுக்கு பொருட்களை வாங்கி வந்துள்ளார். இதனால் மிகவும் வருத்தப்பட்ட அஸ்மா தன் சகோதரர்களிடம் கூறியுள்ளார்.

அஸ்மாவின் சகோதரர் அஸ்மாவை காண அவரது வீட்டிற்கு சென்றபோது, அஸ்மா இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடலில் கிட்டத்தட்ட 60 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஈவிரக்கமில்லாமல் ஜலாலுதீன் தன் மனைவியை பல்வேறு பகுதிகளில் குத்தி கொலை செய்துள்ளார்.

சம்பவம் அறிந்த அப்பகுதி காவல்துறையினர் ஜலாலுதினை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஜலாலுதீன் வழக்கின் தீர்ப்பானது இன்று வெளிவர உள்ளது. இந்த சம்பவமானது பிரித்தானிய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.