பாழடைந்த கிணறு! சாக்குமூட்டைக்குள் இளம் பெண் சடலம்! கணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்! பொள்ளாச்சி பரபரப்பு!

மனைவியை கொன்றுவிட்டு சாக்குமூட்டையில் கட்டி கணவர் நாடகமாடிய சம்பவமானது பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொள்ளாச்சி ஆர்.பொன்னாராம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் கௌசல்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 7 வயதில் மகளுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணமான பிறகு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதம் 26-ஆம் தேதியும் இதேபோன்று சண்டை போட்டுக கொண்டிருந்தனர்.

வாக்குவாதத்தில் ஆவேசமடைந்த சக்திவேல், தன் மனைவி கௌசல்யாவை அடித்து கொலை செய்துவிட்டார். பின்னர் அது வெளியில் தெரியாமல் இருப்பதற்காக சாக்குமூட்டையில் அவரை கட்டி அப்பகுதியிலுள்ள கிணற்றில் வீசியுள்ளார்.

அன்றிரவே அப்பகுதி காவல்நிலையத்தில் தன் மனைவியை காணவில்லை என்று சக்திவேல் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்த தொடங்கினர். விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறினர்.

காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சக்திவேலிடம் விசாரணை நடத்தினர். முதலில் மழுப்பிய சக்திவேல், காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிக்கொண்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 

காவல்துறையினர் கௌசல்யாவின் உடலை மீட்டு எடுத்து பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்திவேலை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.