மனைவியை கொன்று தானும் தற்கொலை! 2 பிள்ளைகளை அநாதையாக்கிய ஆட்டோ டிரைவர்! பரபரப்பு காரணம்!

மனைவியை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது வாழப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய வயது 43. இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கு 16 ஆண்டுகள் முன்னர் அதே பகுதியை சேர்ந்த சுமிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சுனிதாவின் வயது 35. இத்தம்பதியினருக்கு பிரகதி என்ற 15 வயது மகளும், நவ்தீப் என்ற 13 வயது மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் செல்வத்தின் குடும்பத்தினர் தன்னுடைய மாமனாரின் ஊரான கூட்டத்துபட்டிக்கு இடம்பெயர்ந்தனர். செல்வத்திற்கு அதிக அளவில் மதுப்பழக்கம் இருந்தது. மதுப் பழக்கத்தினால் வீணாக பணத்தை செலவழித்து வந்தார். சொந்தமாக இருந்த ஆட்டோவை கைநழுவ விட்டு இன்னொருவருடைய ஆட்டோவை வாடகைக்கு வாங்கி ஓட்டி வந்தார்.

செல்வத்தின் மதுப்பழக்கத்தினால் கணவன் மனைவியிடையே பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. வாக்குவாதங்கள் சிலமுறை கைகலப்பு வரை சென்றுள்ளன. 

நேற்று முன்தினம் இரவும் கணவன் மனைவி இடையே பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. ஆத்திரமடைந்த செல்வம் மண்வெட்டியால் சுமதியின் தலையில் தாக்கியுள்ளார். பலத்த காயம் ஏற்பட்டு சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரும் வீட்டை உள்தாழிட்டு கொண்டதால் பிள்ளைகள் அக்கம் பக்கத்தினரும் உதவியை நாடினர். ஒரு வழியாக வீட்டை திறந்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்குவதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாய் தந்தையை இழந்த பிள்ளைகள் உறவினர்கள் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது கூட்டத்துபட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.