திருமணமாகி 9 மாதம்..! 2வது கணவனால் இளம் மனைவிக்கு நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரம்! போலீசிடம் சிக்கிய கடிதத்தால் அம்பலமான திடுக் உண்மை!

திருமணமான 9 மாதங்களில் புதுப்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் கீர்த்தி மோகன். இவர் 4 ஆண்டுகளுக்கு முன்னர் தலச்சிற என்னும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான தொடக்கத்தில் சுமூகமாக இருந்தாலும், அதன்பின்னர் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியுள்ளன. இத்தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இதனிடையே கணவருடன் ஏற்பட்ட வந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக, கீர்த்தி மோகன் அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். 9 மாதங்களுக்கு முன்னர் வைசாக் என்பவருடன் கீர்த்தி 2-வது திருமணம் செய்து கொண்டார். 

வைசாக் திருமணமான உடனே வெளிநாட்டிற்கு வேலை நிமித்தமாக சென்றுள்ளார். ஆனால் அடுத்த மாதத்திலேயே அவர் இந்தியா திரும்பியுள்ளார். இந்தியா திரும்பியவுடன் கீர்த்தி மோகனின் பெற்றோர் சொத்துக்களை அடகு வைத்து 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அப்போது படுக்கை அறையிலேயே வைத்து வைசாக் கீர்த்தி மோகனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் வைசாக் தன்னுடைய வாகனத்தில் குடியிருப்பில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

கீர்த்தியின் பெற்றோர் வந்து பார்த்தபோது அவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அப்பகுதி காவல்துறையினரிடம் கீர்த்தியின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கீர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டில் பரிசோதனை செய்த போது, கீர்த்தி கைப்பட எழுதிய கடிதமொன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் கீர்த்தி, " எனது பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தும் என் குழந்தைக்கே. இந்த சொத்துகளில் என்னுடைய கணவருக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. எதிர்காலத்தில் என் குழந்தை தனித்து விடப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று எழுதியிருந்தார்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே வைசாக் அப்பகுதி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவமானது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.