தூங்கிய காதல் மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கொடூர கணவன்! நீதிமன்றம் கொடுத்த தரமான தண்டனை!

பெற்ற குழந்தைக்கு பெயர் வைப்பதில் தகராறு ஏற்பட்டதால் காதல் மனைவியை கணவர் கொலை செய்து இருக்கும் சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் உக்கடம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப் பகுதிக்கு உட்பட்ட மஜித் காலனியை சேர்ந்தவர் முரளி. இவருடைய வயது 27. இவர் சிட்கோவில் உள்ள தனியார் லேத் நிறுவனத்தில் கார்பெண்டரிக பணிபுரிந்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் எட்வின் வானமாதேவி. இவர் எம்.காம்,சி.ஏ பட்டப்படிப்புகளை முடித்து ஆங்கில பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.

2015-ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அவர்கள் போத்தனூர் அமீர் சாகிப் காலனிக்கு இடம்பெயர்ந்தனர். சமீபத்தில் இத்தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 

பிறந்த 35-வது நாளில் குழந்தைக்கு பெயர் வைக்க திட்டமிட்டனர். பெயர் வைப்பதில் கணவன் மனைவியிடையே பலத்த சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதங்கள் முற்றிப்போய் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

ஆத்திரமடைந்த முரளி எட்வினின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்த தகவல்களை அறிந்த காவல்துறையினர் முரளியின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலுறவு கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் எட்வின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியானது. காவல்துறையினர் முரளியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் முரளியை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றத்திற்காக முரளிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 5,000 ரூபாய் அபராதம் கட்டவேண்டும் என்றும், இல்லையேல் மேலும் 3 மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்த சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.