குழந்தை யாருடையது? கணவன் கேட்ட கேள்வி! கூலாக பதில் சொன்ன மனைவி! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

குழந்தையை கவனிப்பதில் மோதல் ஏற்பட்டதால் மனைவியை கழுத்தை நெரித்து தனது கணவர் கொலை செய்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகர் பகுதியில் பொன்னேரி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள அரவாக்கம் எனும் இடத்தை சேர்ந்தவர் தீரேச்குமார். இவருடைய மனைவியின் பெயர் கோமதி. கோமதியின் வயது 27. இத்தம்பதியினருக்கு 1 வயதான ஆண் குழந்தையுள்ளது.

திரேச்குமார் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் குடும்பத்துடன் ஆந்திர மாநிலத்திற்கு இடம்பெயர்ந்தார். நேற்று மதியம் கறிக்கடைக்கு சென்று திரேச்குமார் கறி வாங்கி வந்துள்ளார். 

கறியை மனைவியிடம் கொடுத்து சமைக்க கொடுத்துள்ளார். குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு கோமதி தன் கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு தனக்கு வேலை இருப்பதாக கணவர் கூறியுள்ளார். ஆனால் நீங்கள் தான் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கோமதி கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான கணவன், குழந்தை யாருடையது? ஏன் உன்னால் பார்த்துக் கொள்ள முடியாதா? என்று கேட்டுள்ளார். அதற்கு அதில் என்ன உங்களுக்கு சந்தேகம் என்று கூலாக மனைவி பதில் அளித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. வாக்குவாதம் முற்றிப்போய் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த கணவர் கோமதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். உடனடியாக பயந்து போன திரேச்குமார் தன் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடமும், கோமதியின் பெற்றோரிடமும் கூறியுள்ளார். 

சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கோமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோமதியின் உறவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். பிரேத பரிசோதனை முடிவில் கோமதி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானதை தொடர்ந்து திரேச்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் தன் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.