மனைவியின் தலையை துண்டாக வெட்டி கையோடு எடுத்துச் சென்ற கணவன்! அதிர வைக்கும் காரணம்!

மனைவியின் மீது சந்தேகித்த கணவன் அவரை கொன்று தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்ற சம்பவமானது ஆந்திர மாநிலம் சித்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் கலக்கடா என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஹுசைன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அம்மாஜி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் சண்டை சச்சரவுகள் அதிகமாக ஏற்பட தொடங்கின.

திடீரென்று ஒருநாள் வாக்குவாதம் முற்றியது. சம்பவத்தின் அன்று அம்மாஜி கதிராயசெருவு என்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அங்கு விரைந்து சென்ற புருஷன் அவருடைய கழுத்தை வெட்டி சீவியுள்ளார். அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் மனைவியின் தலையுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

காவல் ஆய்வாளரிடம் நடந்த அனைத்தையும் கூறி சரணடைந்தார். காவல்துறையினர் மிரண்டுபோய் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர். தலையின்றி கிடந்த அம்மாஜியின் உடலைப் அப்பகுதியில் உள்ள பிளேர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அப்பகுதியில் காவல்துறையினர் உசைன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி மீது இருந்த சந்தேகத்தினால் தலையை வெட்டி கணவன் காவல் நிலையத்திற்குச் சென்ற சம்பவமானது சித்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.