அய்யய்யோ என் பொண்டாட்டியை காப்பாத்துங்க..! கதறிய கணவன்! நேரில் சென்று பார்த்தவர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!

மனைவியை அடித்துக்கொன்று கணவன் கிணற்றில் வீசிய சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே மீட்டூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சென்றாயன். சென்றாயனின் வயது 25. அதே பகுதியில் உள்ள விவசாய தோப்பில் சென்றாயன் வேலை பார்த்து வந்துள்ளார். 5 மாதங்களுக்கு முன்னர் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

சென்ராயனுக்கு மது அருந்தும் பழக்கமுள்ளது. தினமும் இரவில் மது அருந்திவிட்டு வந்து லட்சுமியிடம் வாய்த்தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். வரதட்சனை கேட்டு வரலட்சுமியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 

மேலும், வரலட்சுமிக்கு அவருடைய பெற்றோர் வீட்டில் சீதனமாக கொடுக்கப்பட்ட நகைகளையும் சென்றாயன் விற்று பணத்தை செலவழித்துள்ளார். நேற்று இரவு கூட இதே போன்று கணவன் மனைவி இடையே பலத்த சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையின்போது தகராறு ஏற்பட்டதில் சென்றாயன் வரலட்சுமியை கொன்றுவிட்டார்.

இதனால் பதறிப்போன சென்றாயன் மனைவியை கிணற்றில் தள்ளியுள்ளார். "என் மனைவி கிணத்துல விழுந்துட்டா!!! யாராவது காப்பாத்துங்க" என்று கத்தியுள்ளார். சில மணிநேரத்திலேயே அந்த வரலட்சுமியை எரிக்க திட்டமிட்டார்.

ஆனால் வரலட்சுமியின் பெற்றோர் அதனை தடுத்து நிறுத்தினர். மேலும் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை பற்றி புகாரளித்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சென்ராயன் தான் கொலை செய்ததை கண்டுபிடித்தனர். ஆனால் தற்போது சென்ராயன் தலைமறைவாகிட்டார்.

காவல்துறையினர் தனிப்படை அமைத்து சென்றாய் என்னை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.