மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த நபரை கண்டறிந்து அவரை கொலை செய்ததாக கணவன் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
அவன் செல்போனில் என் மனைவியின் குளியலறை காட்சி..! கோவில்பட்டியை உலுக்கிய கொலையின் பகீர் திருப்பம்!

கோவில்பட்டி அருகில் உள்ள கயத்தாறு என்ற பகுதியில் உள்ள செட்டிகுறிச்சி சாலைக்குப் பக்கத்தில் இருந்த தோட்டத்தில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் கம்மாபட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மில்டன்ராஜ் என்று கண்டறியப்பட்டது. மில்டன் ராஜ் அந்த பகுதியில் கட்டிடத் தொழிலாளரராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 25 ஆம் தேதி தேவாலயத்திற்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மில்டன் ராஜின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் அவரது செல்போனில் இருந்து அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் விஜயனுக்கு போன் செய்து பேசியது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து எழுந்த சந்தேகத்தின் பெயரில் கொத்தனார் விஜயனை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. போலீசார் விசாரணையில் கொத்தனார் விஜயன் மில்டன் ராஜை கொலை செய்ததாக கண்டறியப்பட்டது. இதுகுறித்து விஜயன் அளித்த வாக்குமூலத்தில் எனது மனைவி குளிக்கும் போது மில்டன் ராஜ் வீடியோ எடுத்து அதை வைத்து என்னை மிரட்டி பணம் கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் என் நண்பர்களின் உதவியோடு அவரை கொலை செய்து விட்டேன் என்று கூறினார். மேலும் அவரது செல்போனில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை அழித்து விட்டதாகவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.