சந்தேக தீ! அலுவலகத்தில் வைத்து மனைவியை சதக் சதக் என குத்திக் கொன்ற கணவன்!

மும்பையில் மனைவியின் மீது சந்தேகம் கொண்ட கணவன் மனைவி வேலை செய்த அலுவலகத்துக்கே சென்று மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.


மும்பையைச் சேர்ந்த 42 வயது குமார் போயிரும், 37 வயது வீணாவும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். அண்மைக் காலத்தில் குமார் மனைவி மீது சந்தேகம் கொண்ட நிலையில் இருவருக்கும் அவ்வப்போது சண்டைகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி வீணா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மனைவி காணாமல் போனதாக காவல்துறையில் குமார் புகார் அளித்தார். வீணாவை காவல் துறையின் அழைத்து விசாரித்த போது வீடு திரும்ப விரும்பவில்லை என வீணா தெரிவித்தார்.

 

இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை மும்பை பயாந்தரில் மீனா வேலை செய்த கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்துக்கு சென்ற குமார், வீணாவை வீட்டுக்குத் திரும்புமாறு வற்புறுத்தியதாகவும், அதற்கு வீணா மறுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

 

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் குமார் வீணாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாகவும் பின்னர் காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாகவும், போலீசார் கூறினர். 

 

விசாரணையில் தனது மனைவி அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதாகவும் எனவே அவளுக்கு வேறு நபருடன் தகாத உறவு இருப்பதாகவும் குமார் கூறியுள்ளான். இதனை கைவிடுமாறு அவளிடம் பல முறை கூறியும் கேட்கவில்லை.

 

   மேலும் வீட்டுக்கு திரும்பவும் வீணா மறுத்தாள். இதனால் அலுவலகம் சென்று அழைத்த போது வர மறுத்தாள். இதனால் தான் கொலை செய்தேன் என்று திடுக் தகவலை வெளியிட்டுள்ளான் கணவன் குமார்.