தனிமையில் வீட்டில் இருந்த மனைவி..! ரூ.5லட்சம் பணம் கொடுத்து 2 ஆண்களை அனுப்பி வைத்த கணவன்! பதற வைக்கும் காரணம்!

கர்நாடகவில் உள்ள பெங்களூருவில் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்தப் பெண்ணின் கணவர் உட்பட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


பெங்களூருவை சேர்ந்த நரேந்திர பாபு மற்றும் வினுதா தம்பதியினர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே இவர்கள் இருவரும் விவாகரத்துக்கும் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களது மகன் அவரது அப்பா நரேந்திரே பாபுவுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் வினுதா தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி வினுதாவின் தாயார் அவருக்கு போன் செய்துள்ளார். தொடர்ந்து அவர் போனை எடுக்காததால் பதற்றமடைந்த அவரது தாயார் மகளின் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி இருப்பதை அறிந்த அவரது தாயார் பதறிப்போய் போலீசாருக்கு போன் செய்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து பார்த்ததில் வினுதா சிமெண்ட் தொட்டி அருகே தலையில் அடிபட்டு சடலமாக இருந்தார். இதனால் உடனடியாக அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வினுதா சிமெண்ட் தொட்டி அருகே அடிபட்டு இறந்து கிடந்ததால் தவறி விழுந்து சிமெண்ட் தொட்டியில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர்.

ஆனால் அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு மற்றும் அவரது வீட்டை அவரது கணவன் விற்க முயற்சித்த விஷயமும் தெரியவந்துள்ளது. இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்ணாடி ஜன்னலை கழற்றி மாற்றி இருந்ததை கண்டறிந்த போலீசார் கொலையாளி இதன் வழியாக தப்பித்து சென்று சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நரேந்திர பாபுவை விசாரணை செய்தனர்.

அவரை விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. 5 லட்சம் கொடுத்து இரண்டு பேரை ஏற்பாடு செய்து அவர் மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டிய உண்மையை போலீசாரிடம் நரேந்திர பாபு ஒப்புக்கொண்டார். மேலும் அவர் ஏற்பாடு செய்திருந்த இரண்டு பேர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே சென்று சோபாவில் அமர்ந்திருந்த வினுதாவை கட்டையால் மண்டையில் அடித்து கொலை செய்துள்ளனர்.

சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவரது உடலை சிமெண்ட் தொட்டி அருகே வைத்து ஏற்பாடு செய்துவிட்டு அவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே சென்றுவிட்டனர் எனவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.