கணவன் இருக்கும் போதே வாலிப வயசு இளைஞனை தேடிய ராணுவ வீரரின் 36 வயது மனைவி..! உண்மை அம்பலமானதால் அரங்கேறிய பகீர்! வேலூர் பரபரப்பு!

வேலூரில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் சண்டையில் மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.


வேலூர் அருகே கம்மவான்பேட்டை என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு செல்வம்(வயது 42) என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார். செல்வத்தின் மனைவி பெயர் சித்ரா (வயது 36). இந்த தம்பதியினருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று மகன் மற்றும் மகள் என்று இரு பிள்ளைகள் உள்ளனர்.

இன்னிலையில் செல்வத்தின் மனைவி சித்ராவிற்கும் அதே பகுதியில் வசித்து வரும் வேறு ஒரு இளைஞனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்கள் இருவரின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். இதுகுறித்து செல்வத்திற்கு தெரிய வரவே இந்த கள்ள காதல் உறவை கைவிடும்படி தன் மனைவியிடம் வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் தன்னால் கைவிட முடியாது என்று கூறிய அவரது மனைவி கூறியிருக்கிறார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில் தன்னுடைய தாய் வேறு ஒருவருடன் கள்ள காதலில் இருந்து வருகிறார் என்பதை அறிந்து கொண்ட அவரது மகள் இந்த உறவை கைவிடும்படி கூறியிருக்கிறார். மகள் கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த சித்திரா அவரை அடித்து உதைத்திருக்கிறார். இதனையடுத்து சித்ராவின் மகள் அவரது தந்தை செல்வத்திற்கும் போன் செய்து நடந்ததை பற்றி கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த செல்வம் நேரில் வந்து தன் மனைவியிடம் சண்டையிட்டு இருக்கிறார்.

கோபத்தில் நிதானத்தை இழந்த செல்வம் கட்டை எடுத்து சித்ராவின் தலையில் ஓங்கி அடிக்கிறார். பலத்த காயங்களோடு சித்ரா மயங்கிக் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் சித்ராவை அடித்துக் கொலை செய்த அவரது கணவர் செல்வத்தை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.