ஏங்க நான் கர்ப்பமா இருக்கேன்..! கேட்ட உடன் மனைவியின் கழுத்தை பிளேடால் கரகரவென அறுத்த கணவன்..! பதற வைக்கும் காரணம்!

பிரேசிலில் மனைவி ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதை தன் கணவரிடம் கூறுகையில், அவர் தன் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரான்சின் டோஸ் சாண்டோஸ் (வயது 22)  இன்று இளம் பெண் பிரேசில் நாட்டை சேர்ந்தவர் . இவர் அழகுக் கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் மார்செலோ அராஜோ (வயது 21) என்பவரை மிகத் தீவிரமாக காதலித்து வந்தார் .ஒருவருக்கு ஒருவர் தங்கள் காதலை பரிமாறிக்கொண்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் டோஸ் சாண்டோஸ் மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்து இருக்கிறார். மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்த விஷயத்தை மிகவும் சந்தோஷமாக தன் கணவரிடம் கூறி இருக்கிறார்.

அந்த சமயத்தில் கணவன் மனைவி இருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் விருதுக்கான விவகாரத்தைப் பற்றி கலந்துரையாடி கொண்டிருந்தனர் . அந்த வேளையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது . பின்னர் அவர்களுடைய கருத்து வேறுபாடு சண்டையாக மாறி இருக்கிறது.

அந்நேரத்தில் டோஸ் சாண்டோஸ் தன் கணவரை சமாதானப்படுத்த முயற்சித்திருக்கிறார் . பின்பு அவரை சமாதானப்படுத்தி படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். படுக்கை அறையிலும் இவர்களுடைய வாக்குவாதம் தொடர்ந்திருக்கிறது இருப்பினும் தொடர்ந்து அவரது மனைவி சமாதானம் செய்ய முயற்சித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் மிகவும் ஆத்திரமடைந்த அரோஜா தன் மனைவியின் மீது மிகுந்த கோபமடைந்து இருக்கிறார். அருகிலிருந்த பிளேடை பயன்படுத்தி அவரது மனைவியின் கழுத்தை கர்ப்பிணி என்றும் பாராமல் அறுத்து கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து வந்த போலீசார் மார்செலோ அராஜோவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் . விசாரணையின்போது தமக்கு ஏற்கனவே நிதி பற்றாக்குறை இருப்பதாகவும் மூன்றாவது குழந்தை வேண்டாம் எனவும் தான் கூறியதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதனை ஏற்காத அவரது மனைவியை கோபத்தில்தான் கொலை செய்ததாகவும் மார்செலோ அராஜோ ஒப்புக்கொண்டிருக்கிறார். 

இருப்பினும் கர்ப்பிணி என்றும் பாராமல் தன் சொந்த மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.