நடுரோட்டில் உடலை வளைத்து நெளித்து டிக்டாக்! மனைவி நடு மண்டையில் நச் என ஒரே போடு! அதிர வைத்த கணவன்!

டிக்டாக் வீடியோக்கள் செய்த பெண் நடுரோட்டில் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பதி அருகே தணிகிரி  மண்டலம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட தாலூறு என்ற கிராமத்தில் ஷேக் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் ஃபாத்திமா. இவருக்கு டிக்டாக் மீது மோகம் இருந்துள்ளது. மோகம் நாளடைவில் அளவுக்கு அதிகமாக சென்றதால் ஃபாத்திமாவை கையில் பிடிக்க இயலவில்லை.

கணவர் கடைக்கு சென்ற பிறகு வீட்டிலேயே நடனமாடி டிக்டாக்கில் வீடியோக்களை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக்களை பார்த்த அக்கம்பக்கத்தினர் பாராட்டுகளை குவித்து, பாத்திமாவை மேலும் மோகத்திற்கு அடிமையாக்கியுள்ளனர். வீட்டிற்குள்ளேயே நாட்டியம் ஆட தொடங்கிய பாத்திமா, சில நாட்கள் கழித்து பொது இடங்களிலும் டிக்டாக் வீடியோக்கள் செய்வதை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் வயல்வெளியில் தன் தோழியுடன் பாத்திமா ஒரு டிக்டாக் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ஷேக்பாஷா பாத்திமாவை கண்டித்துள்ளார். பாத்திமாவின் உறவினர்களும் அவரை கண்டித்துள்ளனர். இருந்தாலும் பாத்திமா டிக் டாக் வீடியோக்கள் செய்வதை தொடர்ந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷேக் பாஷா சம்பவத்தன்று தன் மனைவியை உருட்டு கட்டையால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். காரணம் வெளியில் தெரிந்தால் குடும்ப மானம் பறந்து விடும் என்பதற்காக, ஃபாத்திமாவை தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டு போன்று நாடகமாடி உள்ளார். 

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஷேக் பாஷாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்ட போது, அவர் உண்மையை ஒப்பு கொண்டுள்ளார். காவல்துறையினர் உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பாத்திமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவமானது தாலூறு கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.