கணவர் 3 முறை பாஜக எம்எல்ஏ! ஆனால் மனைவி காய்கறி விற்கும் பெண்மணி! நெகிழ வைக்கும் காரணம்!

3 முறை எம்எல்ஏவாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்று வருவது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் பட்கோகான் தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியில் 1995,2000,2004 ஆகிய ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்  லோக்நாத் மேக்டோ. இந்த முறையும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

இவர் தன்னுடைய எம்.எல்.ஏ சம்பளத்தை கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக பயன்படுத்தினார். மேலும் பல்வேறு சமூக நலத் திட்ட உதவிகளையும் செய்து வந்துள்ளார். 2005-ஆம் ஆண்டில் இவருடைய சமூக சேவையை பாராட்டி சிறந்த எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவருடைய மனைவி காய்கறி வியாபாரம் செய்துவந்தார். தற்போதும் அவர் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். இவளுடைய பெயர் மவுலினிதேவி. இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னுடைய கணவர் பணம் சம்பாதிப்பதில் எந்த ஆர்வமும் காட்டியதில்லை. நான் காய்கறி விற்று குடும்பத்தை நடத்தி வருகிறேன். காய்கறி வியாபாரம் செய்வது ஒன்றும் இழிவானது அல்ல. எனது வீட்டில் காய்கறி தோட்டம் உருவாக்கியுள்ளேன். நான் என்றும் என் கணவரின் சம்பளத்தை எதிர்பார்த்தில்லை" என்று கூறியுள்ளார்.

மேலும் லோக்நாத் கூறுகையில், "என் மனைவி செய்யும் தொழிலை நான் பெருமையாக கருதுகிறேன். நான் என்னுடைய தொகுதி மக்களுக்காக சேவை செய்கிறேன். என் மனைவி என் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்" என்று கூறியுள்ளார்.

இருவரின் புரிதலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.