வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம்! கிச்சனில் கணவன் சடலம்! அங்கேயே பத்து நாட்களாக சமைத்து சாப்பிட்ட மனைவி! பகீர் சம்பவம்!

கணவரை கொன்று கிச்சனில் மனைவி புதைத்த சம்பவமானது  மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப்பிரதேசம் மாவட்டத்தில் அனுப்பூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட கரோண்டி என்ற மாவட்டத்தில் மகேஷ் பனவால் என்ற வழக்கறிஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய அண்ணனின் பெயர் அர்ஜுன் பனவால். இவருடைய மனைவியின் பெயர் பிரமிளா. பிரமிளாவின் வயது 35. 

"நான் என்னுடைய குடும்பத்தினருடன் எப்பொழுதெல்லாம் சென்றோமோ, அப்போதெல்லாம் வீட்டிற்குள் நுழைய விடாமல் பிரமிளா தடுத்துவிட்டார். இதனால் தகுந்த விசாரணை நடத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர். அதன்படி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரமிளா தன்னுடைய நண்பருடன் சேர்ந்து மகேஷை கொலை செய்துள்ளனர். கொலை செய்து விட்டு கிச்சனிலேயே புதைத்துள்ளனர். 

மகேஷ் கங்காராமின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் பிரமிளா ஆத்திரம் அடைந்ததாகவும், பின்னர்  கங்காராமுடன் இணைந்து கொண்டு மகேஷ் கொலை செய்து கிச்சனிலேயே புதைத்ததாகவும் பிரமிளா ஒப்புக்கொண்டுள்ளார். 

ஆனால் இந்த கொலை செய்ததாக கங்கா ராம் ஒப்புக்கொள்ளவில்லை. கொலை நடைபெற்று சுமார் 10 நாட்கள் ஆன நிலையில் சடலத்தை கீழே வைத்து சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார் பிரமிளா. இந்த சம்பவமானது மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.