பேஸ்புக் காதலனுடன் இரவெல்லாம் சல்லாபம்..! மனைவிக்கு மொட்டை அடித்து வீட்டில் பூட்டிய கணவன்..! ஈரோடு சம்பவம்!

பேஸ்புக்கில் தனது மனைவி வேறு ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர் தனது மனைவிக்கு மொட்டை அடித்து வீட்டிலேயே அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து உள்ள ஆலங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மனைவியின் பெயர் லோகநாயகி. இவர்கள் இருவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு 16 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

கடந்த சில ஆண்டுகளாக செல்போனும் கையுமாக சுற்றிக்கொண்டிருந்த லோகநாயகி பேஸ்புக் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகையா என்பவருடன் அறிமுகமாகி அவருடன் பழகி வந்துள்ளார். விடிய விடிய சாட்டிங் செய்து வந்த இவர்கள், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு நீண்டுள்ளது. லோகநாயகி பேஸ்புக்கில் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதை அறிந்த அவரது கணவர் தக்ஷிணாமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் தமிழ்வாணனும் லோக நாயகியை கண்டித்துள்ளனர்.

அதற்கு லோகநாயகி தான் அழகாக இருப்பதால் பேஸ்புக்கில் நாலு பேர் என்னிடம் பேசத்தான் செய்வார்கள் என்று கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த கணவர் தஷிணாமூர்த்தி தனது மனைவி லோகநாயகியை தோட்டத்தில் கட்டிப்போட்டு மொட்டை அடித்து தனியறையில் பூட்டி சிறை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்கள் வீட்டுக்குள்ளே அடங்கி இருந்த லோகநாயகி பின்னர் மீண்டும் தன்னுடைய பேஸ்புக் நண்பர்களை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விளக்கி உதவி கேட்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறைக்கு பெண் ஒருவரை வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி வீட்டில் இல்லாத நேரமாக சென்ற பெண் அதிகாரிகள் லோகநாயகியை மீட்டு ஆம்னி வேனில் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அறிந்த தக்ஷிணாமூர்த்தி தனது இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று மனைவியை அழைத்து சென்ற வாகனத்திற்கு குறுக்கே வந்து மறித்தார். தனது மனைவியை தனது அனுமதியின்றி அழைத்துச் செல்லக்கூடாது என்று தனது மனைவியை அவர் பிடித்து இழுத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் லோகநாயகி கணவருடன் செல்ல மறுத்ததால் அங்கு இருந்த பெண் அதிகாரிகள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து அவரது கணவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றவுடன் லோகநாயகி தனது கணவர் மற்றும் சகோதரர் மீது புகார் அளித்தார். அவரது கணவர் தட்சிணாமூர்த்தியும் தனது மனைவி அதிக நேரம் பேஸ்புக்கில் நேரம் செலவழித்து வந்ததால் அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சிகிச்சைக்காகத்தான் அவருக்கு மொட்டை அடித்தேன் எனவும் கூறியிருந்தார். 

அதற்கு அவரது மனைவி லோகநாயகி தனக்கும் தனது கணவர் தட்சிணாமூர்த்திக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும் அதன் காரணமாகத்தான் தன்னை மொட்டை அடித்து தனி அறையில் பூட்டி வைத்துள்ளதாகவும் தனக்கு மனநிலை பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். 

மனைவியுடன் தீர்க்க முடியாத அளவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் முறையாக நீதிமன்றத்தை அணுகி முறையாக பிரிந்து செல்லவதை விட்டு, மனைவிக்கு மொட்டை அடித்து அவரை தனி அறையில் பூட்டி குடும்பம் நடத்துவது ஏற்புடையதல்ல என காவல்துறையினர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.